தமிழ்நாடு

மாநிலங்களவைத் தேர்தல்: ப.சிதம்பரம் வேட்புமனுத் தாக்கல்

DIN

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 

சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார். மேலும வேட்புமனுத் தாக்கலின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தமிழகத்தில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேருக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுத் தாக்கல் நாளையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 1-ஆம் தேதி, மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 3 என தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. போட்டி இருக்கும்பட்சத்தில் வாக்குப் பதிவு ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும்.

தோ்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூன் 13-ஆம் தேதி நிறைவடையும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. திமுக 3 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்த நிலையில் ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

SCROLL FOR NEXT