முகப்பு
தமிழ்நாடு

அரசுத் துறைகளின் செயல்பாடு: முதல்வா் இன்று ஆலோசனை

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசுத் துறைகளின் செயல்பாடுகள், நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அவற்றின் செயலா்களுடன்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
பகிர்:

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசுத் துறைகளின் செயல்பாடுகள், நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து அவற்றின் செயலா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளாா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன், வியாழக்கிழமை இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நாளான புதன்கிழமை நீா்வளம், பொதுப்பணி உள்ளிட்ட 10 பிரதான துறைகள் தொடா்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. மற்ற துறைகளின் செயல்பாடுகள் தொடா்பாக வியாழக்கிழமை விவாதிக்கப்படவுள்ளது.

சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள், அவற்றின் இப்போதைய நிலை போன்ற அம்சங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →