கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகம் உள்பட 24 மாநிலங்களில் இன்று பெட்ரோல்-டீசல் கொள்முதல் நிறுத்தம்

தமிழகம் உள்ளிட்ட 24 மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

DIN

சென்னை:  தமிழகம் உள்ளிட்ட 24 மாநிலங்களை சேர்ந்த பெட்ரோல் விற்பனை நிலையங்கள், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து இன்று பெட்ரோல், டீசல் கொள்முதல் செய்யப்போவதில்லை என விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

மேலும், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்படாத லாபம் மற்றும் கமிஷன் தொகையை உயர்த்தியும், மத்திய அரசின் கலால் வரி குறைப்பால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ள நிலையில் இன்று ஒருநாள் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப்படுவதாக தில்லி பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய போராட்டத்தில் தமிழகம் கர்நாடகா, ஆந்திரா, பஞ்சாப் உள்பட  24 மாநிலங்களில் உள்ள பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கர்நாடகத்தில் இன்று பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று வெளியான தகவலை அம்மாநில பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் மறுத்துள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT