தமிழ்நாடு

மேட்டூர் நீர்வரத்து அதிகரிப்பு! மதகுகள் மீண்டும் திறப்பு

DIN

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி மேட்டூர் அணையின் உபரி நீர்ப்போக்கி மதகுகள் 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறப்பு.

கடந்த வாரம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  சரிந்ததால் மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வெள்ள நீர் திறக்கப்படுவது  கடந்த 26ம் தேதி முதல் நிறுத்தப்பட்டு மதகுகள் மூடப்பட்டன.

இந்த நிலையில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக செவ்வாய்க்கிழமை காலை முதல் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது .

செவ்வாய்க்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து மாலை 4.00 மணிக்கு வினாடிக்கு 21,500 கன அடியாகவும் 6.30 மணிக்கு நீர்வரத்து வினாடிக்கு 26,000 கன அடியாகவும் அதிகரித்து உள்ளது .

நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் வெள்ள நீர் வினாடிக்கு 4,500 கன அடி வீதம் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் பால மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஆறு நாட்களுக்குப் பிறகு உபரி நீர் போக்கி மதகுகள் செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டது. முன்னதாக எச்சரிக்கை சங்கு ஒலிக்கப்பட்டு உபரி நீர் போக்கி கரையோர மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.

செவ்வாய்க்கிழமை 21-வது நாளாக மேட்டூர் அணையின் நீர் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

உபரி நீர் திறப்பு அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் உபரி நீர் போக்கி கால்வாய் ஓரம் பகுதிகளில் உள்ள தங்கமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய் துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT