மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கூலித்தொழிலாளி சுப்ரமணியம் 
தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து முதியவர் பலி!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையில் அருந்து  கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். 

DIN


திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலையில் அருந்து  கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். 

மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை தோப்புத் தெருவை சேர்ந்த வடிவேல் மகன் சுப்ரமணியன் (65). விவசாயக் கூலி தொழிலாளி. இவர், புதன்கிழமை காலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதற்காக 5 ஆம் எண் வாய்க்கால் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது. அவ்வழியே செல்லும் மின் கம்பத்திலிருந்து மின் கம்பி அறுந்து சாலையில் கிடந்ததை பார்க்காமல் மின் கம்பியை மிதித்ததால் சுப்ரமணியனின் உடலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை காவல் நிலைய போலீசார் நிகழ்வு இடத்திற்கு வந்து சுப்ரமணியனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த சுப்ரமணியத்திற்கு மனைவி சரோஜா, மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு!

கோவிலுமல்ல, சிற்பமுமல்ல... ஆனியா!

SCROLL FOR NEXT