தம்மம்பட்டி: தம்மம்பட்டி பகுதியில் கிறிஸ்தவர்கள், தங்களது மறைந்த முன்னோர்களை வழிபடும் கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது.
கல்லறை திருநாளையொட்டி தம்மம்பட்டி பேரூராட்சியில் காந்திநகர் செல்லும் வழியிலும், கோனேரிப் பட்டியிலும், கொண்டயம் பள்ளியில் சாலையோரமும், செந்தாரப் பட்டி, கெங்கவல்லி, வீரகனூர் ஆகிய ஊர்களில் அந்தந்த பகுதி பங்குத்தந்தைகள் தலைமையில் கிறிஸ்தவர்கள், தங்களது முன்னோர்களது கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து, ஊது பத்திகள் ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி செய்தனர்.
இதையும் படிக்க | வினோதம்... சத்தீஸ்கரில் சிறுவன் கடித்து பாம்பு சாவு!
கல்லறைத் திருநாள் வழிபாடுகளில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.