ஆளுநர் ஆர்.என். ரவி 
தமிழ்நாடு

ஆளுநரை திரும்பப் பெற மனு: தில்லி சென்றார் ஆர்.என்.ரவி!

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக மனு அளிக்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லிக்கு சென்றுள்ளார்.

DIN

தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு திமுக மனு அளிக்கவுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தில்லிக்கு சென்றுள்ளார்.

தமிழக அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தொடர்ந்து தமிழக அரசை விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளதாகவும், அந்த மனுவில் திமுக எம்.பி.க்கள் மற்றும் பிற கட்சிகள் கையெழுத்திடவும் திமுக அழைப்பு விடுத்துள்ளது.

இந்த மனு குடியரசுத் தலைவரிடம் ஓரிரு நாள்களில் அளிக்கப்படவுள்ள நிலையில், திடீர் பயணமாக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை தில்லி புறப்பட்டுச் சென்றது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT