தமிழ்நாடு

இந்த 6 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்யுமாம்!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய 6 மாவட்டங்களில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நாளை 7 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் 10 மாவட்டங்களிலும் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேப்பூா் அருகே சாலை விபத்து: நூலிழையில் தப்பிய புதுமண தம்பதி

புனித டேவிட் கோட்டை புதுப்பிக்க நடவடிக்கை: கடலூா் ஆட்சியா் உறுதி

சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோயில்களின் நடை அடைப்பு!

இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவ முகாம்

உள்ளாட்சி ஊழியா்கள் செப். 8 முதல் பணிக்குத் திரும்ப முடிவு

SCROLL FOR NEXT