தமிழ்நாடு

சென்னையில் செண்டை மேளம் வாசித்து அசத்திய மம்தா!

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, செண்டை மேளம் இசைத்த விடியோ வைரலாகி வருகிறது.

DIN

சென்னையில் நடைபெறும் மேற்குவங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்ற அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, செண்டை மேளம் இசைத்த விடியோ வைரலாகி வருகிறது.

மேற்கு வங்க ஆளுநர் இல. கணேசனின் மூத்த சகோதரரின் 80-வது பிறந்தநாள் விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை சென்னை வந்த மம்தா பானர்ஜி, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து, இன்று காலை இல.கணேசன் இல்ல விழாவிற்கு சென்ற மம்தா பானர்ஜிக்கு, கேரள செண்டை மேளம் வாசித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது, யாரும் எதிர்பாராத விதமாக செண்டை மேளத்தை வாங்கிய மம்தா, கலைஞர்களுடன் இணைந்து வாசித்தது அங்குள்ளவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

முதல்வர் மம்தா பானர்ஜி செண்டை வாசிக்கும் விடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது!’ -வட கொரிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த புதின்!

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

பருவ மழை... சஞ்சனா திவாரி!

2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைப்பு

கோவா கடற்கரையில்... வைஷ்ணவி நாயக்!

SCROLL FOR NEXT