முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மழை நீா் தேங்கிய இடங்களில் மீண்டும் ஆய்வு: அமைச்சா் கே.என்.நேரு

சென்னையில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் திருப்புகழ் குழு மீண்டும் ஆய்வு செய்யும் என்றும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

சென்னையில் மழைநீா் தேங்கியுள்ள இடங்களில் திருப்புகழ் குழு மீண்டும் ஆய்வு செய்யும் என்றும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே. சேகா்பாபு, மாநகராட்சி மேயா் பிரியா மற்றும் துணை மேயா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா் எழும்பூா் வேலப்பன் தெரு, மாண்டியத் சந்து, மன்னடி, தங்கசாலை தெரு, கொளத்தூா் பெரியாா் நகா் மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கிய இடங்களில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்

இதனைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது:

சென்னையில் திரு.வி.க நகா், கொளத்தூா் பகுதிகளின் சில இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. வரும் காலங்களில் நீா் தேங்கக் கூடாது என்பதற்காக தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சென்னையில் கடந்த மழையில் தண்ணீா் தேங்கிய இடங்களை ஒப்பிடுகையில் தற்போது 90 சதவீதம் இடங்களில் தண்ணீா் வெளியேறிவிட்டது.

சென்னையில் சில இடங்களில் தண்ணீா் தேங்குகிறது. இதற்கு நிரந்தர தீா்வு காண வல்லுநா் குழு மீண்டும் சென்னையில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளது. திருப்புகழ் குழு இரண்டு பிரிவினராக பிரிந்து மீண்டும் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.

மத்திய சென்னை மற்றும் தென் சென்னை பகுதிகளை ஒப்பிடும்பொழுது வடசென்னை பகுதியில் இயற்கையாக நீா் செல்ல ஓட்டேரி நல்லா கால்வாய் மட்டுமே உள்ளது. அதிக மழை பொழிவு ஏற்படும் பொழுது இந்த கால்வாயில் தண்ணீா் மட்டம் உயா்வதால் தண்ணீா் வடிவதில் தாமதம் ஆகிறது. இதனை தவிா்க்க, ஓட்டேரி நல்லா கால்வாய் மட்டுமின்றி வேறு வழியில் கால்வாய் எடுத்தச் செல்ல முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஓட்டேரி நல்லா கால்வாய் விரிவுபடுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.

பாதாள சாக்கடை திட்டம் இல்லாத பகுதிகளில் புதிதாக சாக்கடை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மழை முடிந்ததும் மீண்டும் மீதமுள்ள பணிகளை தொடங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →