தமிழ்நாடு

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

DIN

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ் பெற்ற சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், சுருளி அருவியின் நீர் வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறை ஆகிய பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் அருவிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனை கண்காணித்த கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் வெள்ளிக்கிழமை அருவியில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்கத் தடை விதித்தனர். 

இது குறித்து வனச்சரக அலுவலர் கூறியதாவது: அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது, வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT