தமிழ்நாடு

தஞ்சையில் பழைய கட்டடம் இடிந்து விபத்து!

DIN

தஞ்சாவூர்: தஞ்சை கீழராஜவீதியில் நூறாண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில். அதிர்ஷ்டவசமாக இதில் உயிர்ச் சேதம் இல்லை.

தஞ்சாவூர் கீழ ராஜவீதி மெயின் சாலையில் பழமையான கட்டடம் ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை. இருந்தாலும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் சர்வீஸ் சென்டர் இருந்தது. தற்போது அந்த கடையும் காலி செய்யப்பட்டுவிட்டது. கடையின் பொருட்கள் மட்டும் உள்ளே இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணிகள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் நடைபெற்று வந்தன.அப்போது திடீரென இந்த கட்டடம் இடியத் தொடங்கியது. மேலும், அதன் அருகில் இருந்த மின் கம்பமும் சாய்ந்து விழுந்தது. சிறிது நேரத்தில் கட்டடத்தில் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது.

இதற்கிடையே வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு கொண்டிருந்தவர்கள் கிழக்கு போலீசார், தீயணைப்புத் துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். இதையடுத்து இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி நடைபெற்றது.

இரவு நேரம் என்பதால் கட்டிடம் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் சேதம் ஆகியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்போதும் பரபரப்பாக இயங்கும் கீழ ராஜ வீதியில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழமையான இதனை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைந்து மீதமுள்ள கட்டடத்தையும் இடிக்க வேண்டும், பாதுகாப்பற்ற முறையில் உள்ள கட்டிடங்கள் எங்கெங்கு உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT