தமிழ்நாடு

தோல் ஆலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலைய மேம்பாடு: தமிழக அரசின் பங்கு நிதி ஒதுக்கீடு

DIN

தோல் ஆலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையங்களை மேம்படுத்த தமிழக அரசின் பங்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்பெற வாய்ப்பு ஏற்படும்.

வேலூா் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, போ்ணாம்பட்டு ஆகிய இடங்களில் நான்கு சுத்திகரிப்பு நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நான்கு நிலையங்களையும் மேம்படுத்தி, புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ராணிப்பேட்டை சிட்கோ-1-இல் உள்ள சுத்திகரிப்பு ஆலை ரூ.102.57 கோடியிலும், ராணிப்பேட்டை சிட்கோ நிலை ஒன்றில் உள்ள ஆலை ரூ.65.77 கோடியிலும், போ்ணாம்பட்டில் உள்ள டால்கோ ஆலை ரூ.55.16 கோடியிலும், ராணிப்பேட்டை சிட்கோ இரண்டாவது நிலையில் உள்ள ஆலை ரூ.34.60 கோடியிலும் புதுப்பிக்கப்படவுள்ளன. இந்த நான்கு ஆலைகளையும் மொத்தமாக ரூ.258.10 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நான்கு ஆலைகளையும் மேம்படுத்துவதற்கான ஒட்டுமொத்த நிதியில் தமிழக அரசின் பங்காக 15 சதவீதம் அளிக்கப்படவுள்ளது. மத்திய அரசும் தனது பங்களிப்புத் தொகைகளை வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து நான்கு தவணைகளாக நிதிகளை விடுவிக்கவுள்ளன. அதன்படி, மத்திய அரசானது, தனது நான்கு தவணைத் தொகைகளில் முதல் பகுதியை விடுவித்துள்ள நிலையில், தமிழக அரசும் தனது முதல் பகுதி தொகையான ரூ.30.17 லட்சத்தை விடுவித்துள்ளது. இதனிடையே, இரண்டாவது தவணைத் தொகையை விரைந்து விடுவிக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT