தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் 1.15 கிலோகிராம் தங்கம் பறிமுதல்!

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 51.42 லட்சம் மதிப்புள்ள 1.15 கிலோகிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

DIN

சென்னை விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 51.42 லட்சம் மதிப்புள்ள 1.15 கிலோகிராம் தங்கத்தை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திங்கள்கிழமை அபுதாபியில் இருந்து வந்த ஆண் பயணி  ஒருவரை, சுங்தத் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதித்தனா்.

அப்போது அவர் உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினா். அவற்றை ஆய்வு செய்ததில், விதிமீறி தங்கத்தை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ. 51.42 லட்சம் மதிப்புடைய 1.15 கிலோகிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக பயணி கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற இருவா் கைது

12 கடைகள், நிறுவனங்களில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை

பேரூா் தமிழ்க் கல்லூரியில் தமிழ் மன்றம், தொல்லியல் வகுப்பு தொடக்கம்

மதுக்கரை சுங்கச் சாவடியில் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்கு

SCROLL FOR NEXT