தமிழ்நாடு

தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் தவிப்பு

தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

DIN

தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர்ப் பகுதிகளிலிருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரயில் மூலம் சென்னை நகருக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் - பூங்கா ரயில் பாதையில் உயர்மின்அழுத்த கம்பியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

மின்சார ரயில்கள் அங்கங்கே நிறுத்தப்பட்டதால் நேரத்திற்கு பணிக்கு செல்வோர் தவித்து வருகின்றனர். தொடர்ந்து, ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள கோளாறை சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து இந்தியா சாதனை; ஜிம்பாப்வேவுக்கு இமாலய இலக்கு!

ரூ. 2,000 கோடி முதலீடு செய்த ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ்!

மேற்கு வங்கம்: விடுதி அறையில் இருந்து மருத்துவ மாணவரின் சிதைந்த உடல் மீட்பு

வெறுப்புணர்வுக் கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு குவாஹாட்டி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காங்கிரஸுடன் கூட்டணி? நல்லதே நடக்கும்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT