தமிழகத்தில் 45 இடங்களில் என்ஐஏ சோதனை
கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 45 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த அக்டோபா் 23ஆம் தேதி நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தாா். முபீன் வீட்டில் போலீஸாா் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்து, என்.ஐ.ஏ.விடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதையும் படிக்க | அடுத்த 3 மணிநேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?
இதைத் தொடா்ந்து, காா் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடையதாக 6 போ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கார் வெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.