கோப்புப்படம் 
தமிழ்நாடு

கனமழை... காஞ்சிபுரம் மாவட்டத்தில் முழு கொள்ளளவை எட்டிய 42 ஏரிகள்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 42 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

DIN

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 42 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக சென்னையில் உள்ள மண்டல வானிலை மையம் அறிவித்துள்ளது. இது அடுத்த 48 மணி நேரங்களில் வலுப்பெற்று வடமேற்குப் பகுதியை நோக்கிக் நகரும் எனக் கூறியுள்ளது. அதாவது, தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் வரும் 12-ஆம் தேதிக்குள் அதன் நகா்வு இருக்கும்.

இதனால், கன முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், காஞ்சிபுரம்  மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஏரிகள் நிரம்பி உபரிநீா் வெளியேறி வருகிறது. 

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில்  42 ஏரிகள் 100 சதவீதமும், 33 ஏரிகள் 75 சதவீதத்திற்க்கு மேலாகவும், 143 ஏரிகள் 50 சதவீதத்திற்க்கு மேலாகவும் முழுகொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை தகவல் தெரிவிக்கின்றன. 

வெள்ளிக்கிழமை கன மழை பெய்து வருவதால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆண்டுதோறும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2000 வழங்கப்படும்!

ஐஸ்வர்யா ராஜேஷ் - விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18!

தலைமுடி உதிர்கிறதா? இந்த ஒரே பொருள் போதும்!

சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்!

ராகுல் காந்தி நாளை மறுநாள் சென்னை வருகை!

SCROLL FOR NEXT