மதுரை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தடைந்தார்.
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்கின்றனா்.
இதற்காக பிரதமர் மோடி மதுரை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல் வந்தடைந்தார். திண்டுக்கல் வந்தடைந்த அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து பிரதமர் மோடி திண்டுக்கல்லில் இருந்து காரில், காந்தி கிராம பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி திண்டுக்கல் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.