தமிழ்நாடு

சீர்காழியில் 3-வது நாளாக மழை: 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

DIN

சீர்காழியில் மூன்றாவது நாளாக பெய்துவரும் மழையால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக இரண்டு நாள்கள் கன மழை பெய்தது. சீர்காழியில் அதீத கன மழை 44 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

இதன் காரணமாக குடியிருப்புப் பகுதியில் விளைநிலங்கள் நீரில் மூழ்கி, மழைநீர் வடியாத நிலையில் இன்று மூன்றாவது நாளாக மழை பெய்து திருவெண்காடு, மங்கைமடம், நெப்பத்தூர், திருநகரி, எடமணல், திருமுல்லைவாசல், ஆச்சாள்புரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30,000 ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. 

நேற்று முன்தினம் கனமழை பெய்த மழை தண்ணீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்து இருப்பது விவசாயிகள் இடையே வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இனி வரும் காலங்களில் முறையாக வடிகால் ஆறுகளை தூர்வாரி, வடிகால் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முன்னாள் எம்எல்ஏ வேலாயுதன் காலமானார்

உத்தமபாளையம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்:கணவன் - மனைவி பலி

தக் லைஃப் படத்தில் சிம்பு: போஸ்டர் வெளியீடு

ஏர் இந்தியா ஊழியர்கள் போராட்டம்: 70 விமானங்கள் ரத்து

பவுனுக்கு ரூ.80 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT