அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.
இன்று காலை 9.20 மணியளவில் பர்பதாரில் ராணுவக் குழு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு தொடங்கியது.
துப்பாக்கிச்சூடு தொடங்கியபோது ராணுவ ரோந்துக் குழுவினர் வழக்கமான பணியில் இருந்தனர். மேலும் அப்பகுதியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றது.
வெடிகுண்டு சத்தம் கேட்டதாக அருகில் உள்ள கிராமத்தினர் தகவல் தெரிவித்தனர்.
அப்பகுதியில் உள்ள பெங்கேரி-திக்பாய் சாலை மூடப்பட்டுள்ளது மற்றும் மாநில காவல்துறை உள்பட கூடுதல் படைகள் அப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.