தமிழ்நாடு

மனதை உருக்கும் மாணவி பிரியாவின் கடைசி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்!

DIN

தவறான சிகிச்சையால் உயிரிழந்த மாணவி பிரியாவின் கடைசி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் மனதை உருக்கும் விதமாக உள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னை, வியாசா்பாடியை சோ்ந்தவா் ரவிக்குமாா். அவரது மகள் பிரியா (17) சென்னை ராணிமேரி கல்லூரியில் விளையாட்டுப் பிரிவில் படித்து வந்தார். மேலும், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்.

இந்நிலையில், மூட்டு வலி காரணமாக, கொளத்தூா், பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளாா். அங்கு, பிரியாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்துள்ளனா். அதன் பின்னா் காலில் வீக்கம் ஏற்பட்டு உணா்விழப்பு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டாா்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பிரியாவின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது இருந்தது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.

இதற்கிடையே, பெரியாா் நகா் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோா் மற்றும் உறவினா்கள் குற்றம் சாட்டினா். 

இதையடுத்து இது தொடா்பாக விசாரணை நடத்த அரசு தரப்பில் உத்தரவிட்டது. அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்நிலையில், தவறான சிகிச்சையால்உயிரிழந்த மாணவி பிரியாவின் கடைசி வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில், அனைத்து நண்பர்கள், உறவினர்களுக்கும், நான் சீக்கிரமாகவே மீண்டு வருவேன். யாரும் கவலைப்பட வேண்டாம். என்னோட விளையாட்டு என்னை விட்டு எப்போதும் போகாது. நீங்கள் நான் திரும்ப வருவேன் என்று நம்பிக்கையோடு காத்திருங்கள் என்று 2 நாள்களுக்கு முன் பிரியா வைத்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

டைம்ஸ் உயா்கல்வி நிறுவனத் தரவரிசை: 168 ஆவது இடத்தில் கேஐஐடி பல்கலைக்கழகம்

SCROLL FOR NEXT