மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

‘சிறை செல்ல நேரிடும்’: அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரித்துள்ளது.

DIN

கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும் என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை எச்சரித்துள்ளது.

தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான சொத்துகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

மேலும், திருச்சி உஜ்ஜீவநாதர் கோயிலுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, ‘கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்காத அதிகாரிகள் சிறைக்கு செல்ல நேரிடும்’ என்று எச்சரிக்கை விடுத்தது.

மேலும், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான திருச்சி உஜ்ஜீவநாதர் கோயில் நிலங்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

தமிழ்நாட்டின் சைபர் குற்றங்களுடன் தொடர்பு? தில்லியில் 24 சிம் பாக்ஸ்கள் பறிமுதல்

டார்ஜிலிங்கில் தொடர் நிலச்சரிவுகள்! உயிரிழப்பு 14 ஆக உயர்வு! | Landslide | Rain

ரிதம்... விதி யாதவ்!

"துலாம் ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT