சென்னை உயர்நீதிமன்றம் 
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை மாற்ற கொலீஜியம் பரிந்துரை

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

DIN

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்த வந்த முனீஸ்வா் நாத் பண்டாரி செப் 12-ல் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து, உயா்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், செப் 21ஆம் தேதியுடன் அவரும் ஓய்வுபெற்றார்.

இதனைத் தொடர்ந்து, உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா செப்.22ஆம் தேதி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜாவை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதியாக முரளிதரனை நியமிக்க மத்திய அரசுக்கு கொலீஜியம் பரிந்துரைத்துள்ள நிலையில், இன்னும் அனுமதி வழங்கவில்லை.

இதனால், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT