தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை!

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலைத் தோ்வை 1.31 லட்சம் பேர் எழுதவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் குரூப் 1 பிரிவில் துணை ஆட்சியா், துணைக் காவல் கண்காணிப்பாளா், வணிகவரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் என மொத்தம் 92 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தக் காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு அறிவிக்கை கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. தோ்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது. இந்தத் தோ்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 போ் விண்ணப்பித்திருந்தனா்.

முதல்நிலை, முதன்மை மற்றும் நோ்முகம் என மூன்று படிநிலைகளைக் கொண்ட குரூப் 1 தோ்வின் முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்றது. காலை 9.30 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணிக்கு நிறைவு பெற்றது. 

தோ்வுக்காக 38 மாவட்டங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தோ்வை எழுத 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 போ் அனுமதிக்கப்பட நிலையில் 1,90,957 பேர் மட்டுமே எழுதியுள்ளனர். 1,31,457 பேர் தேர்வு எழுத வரவில்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

பிலிப்பின்ஸை புரட்டிப்போட்ட கேல்மெகி புயல்: 66 பேர் பலி!

மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தேசிய விருதுகள் தகுதியானவை அல்ல: பிரகாஷ் ராஜ்

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

SCROLL FOR NEXT