தமிழ்நாடு

இரட்டை இலையின்றி சொந்த ஊரில்கூட இபிஎஸ் வெல்ல முடியாது: தினகரன்

இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது, அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாது என டிடிவி‌ தினகரன் கூறியுள்ளார். 

DIN

தஞ்சாவூர்:  இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது, அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாது என டிடிவி‌ தினகரன் கூறியுள்ளார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடச் செல்வதற்கு முன் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, 'இரட்டை இலை சின்னம் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியால் எதுவும் செய்ய இயலாது, அவரது சொந்த ஊரில் கூட உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் வெற்றி பெற முடியாத நிலையே உள்ளது.

நாங்கள் புதிதாக கட்சியை ஆரம்பித்து தேர்தலை சந்தித்ததைப்போல் எடப்பாடியால் சந்திக்க முடியுமா?

இவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தையே கட்சியை விட்டு நீக்கியவர். ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் ஓரணியில் திரண்டால்தான் எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும்' என்று தெரிவித்தார். 

மேலும், 'கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. அவரது குடும்பத்திற்கு வழங்கிய இழப்பீடு, அரசு வேலை, வீடு என அரசு அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதனால் நான் திமுக கூட்டணிக்கு செல்வேன் என எதிர்பார்க்காதீர்கள்' என்றார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் நிவாரணம் என்பது மிக மிகக் குறைவு, இதனை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவையில் அதிகரிக்கும் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சான்றிதழ்களை முறையாக பதிவேற்ற வேண்டும்: குரூப் 1 தோ்வா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

ஹரியாணா காவல் துறை ஐஜி தற்கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

தீபாவளி பண்டிகை: 6,630 பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி

SCROLL FOR NEXT