கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு வழக்கு விவகாரம்: நாளை இறுதி விசாரணை!

அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக திங்கள்கிழமை(நவ.21) இறுதி விசாரணை நடக்கிறது.

DIN


அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக திங்கள்கிழமை(நவ.21) இறுதி விசாரணை நடக்கிறது.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், வைரமுத்து சார்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு செய்யப்பட்டது. 

இந்த மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்குரைஞர் பாலாஜி சீனுவாசன் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், அதிமுக பொதுக் குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக உள்ளனர். எனவே தற்போது ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு அற்பமான ஒன்று ஆகும்.

தொண்டர்கள் விருப்பத்திற்கு ஏற்பவும், கட்சியின் நலனைக்கருதியும் ஒற்றை தலைமை என்பது ஏற்படுத்தப்பட்டது. கட்சியின் பொதுக்குழுவுக்கே அனைத்து அதிகாரமும் உள்ளது, எனவே அதன் முடிவே இறுதியானது.

மேலும் கட்சியின் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டதால் தான் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, அதுவே பொதுக்குழுவிலும் பிரதிபலித்தது. ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்தை சூறையாடி கட்சியின் விதிகளை மீறியும், கட்சிக்கு எதிராக செயல்பட்டுள்ளார்.

எனவே, அவர் எந்த நிவாரணமும் பெற தகுதி இல்லாதவர். மேலும் கட்சி பொதுக்குழு கூட்டப்படுவதற்கு முன்னர் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டது என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக திங்கள்கிழமை(நவ.21) இறுதி விசாரணை நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

வடதமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT