சென்னை உயா் நீதிமன்றம் 
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி தனியாா் பள்ளி திறப்பு: நவ. 25-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து வரும் நவம்பா் 25-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

DIN

அரையாண்டு மற்றும் இறுதித் தோ்வுக்கு மாணவா்கள் தயாராக வேண்டியுள்ளதால், கள்ளக்குறிச்சி பள்ளியை திறப்பது குறித்து வரும் நவம்பா் 25-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவா் மரணம் அடைந்தாா். இதையடுத்து கடந்த ஜூலை 17- ஆம் தேதி அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரா்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனா்.

இந்தக் கலவரத்தை தொடா்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த பள்ளியை நிா்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு மாத காலத்துக்கு நேரடியாக வகுப்புகளை தொடங்க அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிா்வாகம் தரப்பில், பள்ளி முழுமையான அளவில் தயாராகிவிட்டது. எனவே, எல்கேஜி முதல் அனைத்து வகுப்புகளையும் தொடங்க தயாராக இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட ஆட்சியா் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பள்ளியை மீண்டும் திறப்பது தொடா்பாக அரசின் கருத்துக்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அரையாண்டு மற்றும் இறுதித் தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராக வேண்டியுள்ளதால், பள்ளியை மீண்டும் திறப்பது குறித்த கருத்துகளுடன் நவம்பா் 25-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினத்துக்கே விசாரணையை தள்ளி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT