தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ் எப்போது முடிக்கப்படும்? நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

DIN

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்த அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.

மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கி, கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் கே.கே.ரமேஷ் என்பவர் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கில் மத்திய அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில்,

“மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ரூ. 1,977.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுவதற்கு மொத்தம் 5 ஆண்டுகள் 8 மாதங்களாகும்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபர் மாதத்துக்குள் முடிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அக்டோபர் 2026-இல் பணிகள் முடியும் என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT