முகப்பு
தமிழ்நாடு

டிச.1-இல் திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம்

திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம், டிச. 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
அமைச்சர் துரைமுருகன்
பகிர்:

திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம், டிச. 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் டிசம்பா் 1-ஆம் தேதி

நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் காலை 10.30 மணிக்கு இக்கூட்டம் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் அமைச்சரும், திமுக முன்னாள் பொதுச் செயலாளருமான அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அதில் அறிவித்துள்ளாா் துரைமுருகன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.