முகப்பு
தமிழ்நாடு

குறவன், குறத்தி பெயரில் ஆபாச நடனம்! தடுக்க முடியுமா? அரசுக்கு கேள்வி

தமிழக டிஜிபி, பழங்குடியின நலத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:55 AM
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை (கோப்புப் படம்)
பகிர்:

குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை தடுக்கும் வகையில் சுற்றறிக்கை வெளியிட முடியுமா? அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழக டிஜிபி, பழங்குடியின நலத்துறை இயக்குனர் உள்ளிட்டோரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறவன், குறத்தி நடனம் எனும் பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை புதன்கிழமை இன்று (நவ.23) விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக காவல்துறை தலைவர், பழங்குடியினர் நலத்துறை இயக்குநரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.

மேலும், ஆபாச நடனம் எந்த வகையில் இருந்தாலும், அது ஏற்கத்தக்கதல்ல என சுட்டிக்காட்டிய நீதிமன்றம், எந்த சமூகத்தினரும், யாராலும் அவமதிக்கப்படக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →