தமிழ்நாடு

விங்ஸ் ஏற்றிவந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

DIN

விங்ஸ் ஏற்றிவந்த லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தநேரி அருகே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அடுத்த கந்தநேரி அருகே, தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள பெட்ரோல் பங்கில், டீசல் நிரப்புவதற்கு சென்னையில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி விங்ஸ்(காற்றாலை இறக்கை) ஏற்றிச்சென்ற லாரி அதிகலை 5 மணி அளவில் பெட்ரோல் பங்கு உள்ளே சென்றுள்ளது. 

இந்த லாரியை தென்காசியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

லாரி பெட்ரோல் பங்கு உள்ளே செல்லும் போது காற்றாலை இறக்கை சாலையின் குறுக்கே முழுவதுமாக நீட்டி நிற்க அந்த நேரத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த கண்டெய்னர் லாரி அதிவேகமாக விங்ஸ் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில், கண்டெய்னர் லாரியின் மீது காற்றாலை இறக்கை கத்தி போன்று குத்தியதால் லாரியின் மறு பக்கம் இறக்கை வெளியே வந்ததில், கண்டெய்னர் லாரி விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியை ஓட்டிவந்த ஓட்டுநர் கோவை ஓமலூரைச் சேர்ந்த பால்ராஜ் மற்றும் கிளீனர் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பனி மூட்டம் அதிகமானதால் முன்னே சென்ற வாகனம் தெரியவில்லை என்பதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து பள்ளிக்கொண்டா காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறனர்.

இந்த விபத்தால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

SCROLL FOR NEXT