முகப்பு
தமிழ்நாடு

சபரீசனை சந்தித்த காயத்ரி ரகுராம்? - அமர் பிரசாத் ரெட்டி குற்றச்சாட்டு

மூன்று மாதங்களுக்கு முன்பு காயத்ரி ரகுராம் சோமர்செட் ஹோட்டலில் சபரீசனை தனிப்பட்ட முறையில் காயத்ரி ரகுராம் சந்தித்து பேசியதாக தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றொரு குற்றச்சாட்டை வெளியிட்டுள்

Updated On : 23 நவம்பர் 2022, 1:23 pm IST
பகிர்:


மூன்று மாதங்களுக்கு முன்பு காயத்ரி ரகுராம் சோமர்செட் ஒட்டலில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மருமகன் சபரீசனை தனிப்பட்ட முறையில் காயத்ரி ரகுராம் சந்தித்து பேசியதாக தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றொரு குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார். 

பாஜக கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடா்ச்சியாக ஈடுபட்டு வந்ததால், காயத்ரி ரகுராம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாத காலத்துக்கு நீக்கப்படுவதாக மாநில தலைமை தெரிவித்தது.

இந்நிலையில், காயத்ரி ரகுராம் மீது தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மற்றொரு அதிர்ச்சி குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அமர் பிரசாத் ரெட்டி தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது, 'மூன்று மாதங்களுக்கு முன்பு காயத்ரி ரகுராம் சோமர்செட் ஹோட்டலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசனை தனிப்பட்ட முறையில் சந்தித்தார்.

இருவரும் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டனர். துரோகிகளுக்கு பாஜகவில் இடம் இல்லை' என்று பதிவிட்டுள்ளார்.

ட்விட்டரில் காயத்ரி ரகுராம் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.