முகப்பு
தமிழ்நாடு

கேக் தயாரிப்பில் களமிறங்கும் ஆவின் நிர்வாகம்!

கிருஸ்துமஸ்  மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் கேக் தயாரிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 23 நவம்பர் 2022, 1:22 pm IST
பகிர்:

கிருஸ்துமஸ்  மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆவின் நிர்வாகம் கேக் தயாரிக்க உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

பிளம் கேக், வெண்ணிலா மற்றும் சாக்லெட் உள்பட 4 வகையான கேக் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான பணியை இம்மாதவே தொடங்க உள்ளது.

3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் 'டிலைட்' எனும் பசும்பாலை ஆவின் நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்தது.

Advertisement

Advertisement

ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகையின் போது, ஆவின் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நெய், வெண்ணெய், பால்கோவா, மைசூா்பாகு, பால் கேக், நெய் அல்வா, குலோப் ஜாமூன், ரசகுல்லா போன்ற இனிப்பு வகைகளை விற்பனை செய்தது.

பால், இனிப்பு வகைகள், ஐஸ்கீரிம் மற்றும் நொறுக்கு தீனிகளை தொடர்து கேக் வகைகளை ஆவின் அறிமுகம் செய்யவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments