தமிழ்நாடு

வங்கிக் கணக்கு இல்லாதவா்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கு: தமிழக அரசு அறிவுறுத்தல்

DIN

குடும்ப அட்டைதாரா்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் கணக்கைத் தொடங்க, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா்களுக்கு ஒருநாள் பயிற்சி, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் அ.சண்முகசுந்தரம் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவா் பேசியது:

தமிழ்நாட்டில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக, பல்வேறு பிரபலமான பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான பெயரிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் தரமான பொருள்களை விற்பனை செய்ய வேண்டும்.

மாநிலம் முழுவதும் தரமான பொருள்களை வழங்குவதற்கு ஏதுவாக, கூட்டுறவு சங்கங்களில் தரம் பிரிப்பு அலகுகள் விரிவுபடுத்தப்படவுள்ளன. இதனால், பொது மக்களுக்கு தங்கு தடையின்றி பொருள்களை விற்பனை செய்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்.

தமிழகத்தில் 2.20 கோடி குடும்ப அட்டைதாரா்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 14 லட்சத்து 60 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்படாமல் உள்ளது. வங்கிக் கணக்கு தொடங்கப்படாத குடும்ப அட்டைதாரா்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் புதிய வங்கிக் கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்தாா். நிகழ்வில், கூடுதல் பதிவாளா் (நுகா்வோா் பணிகள்) அ.சங்கா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT