தமிழ்நாடு

இந்திரா காந்தி சிலை அகற்றம்: ஸ்ரீபெரும்புதூரில் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல்!

ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

DIN

ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டதால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகம் எதிரே 1988ல் வைக்கப்பட்டுள்ள இந்திரா காந்தி சிலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்து வந்தது.

இதனால் தேசிய நெடுஞ்சாலைத் துறை பலமுறை காங்கிரஸ் கட்சியினரிடம் கூறியும், இந்திரா காந்தி சிலை அகற்றப்படாததால் தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறையுடன் இணைந்து நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் இந்திரா காந்தி சிலையை அகற்ற முற்பட்டனர்.

இப்பணியானது இன்று(சனிக்கிழமை) காலை சுமார் 6.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு 9 மணி வரை நடைபெற்றது. இதனால் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆமை போல் நகர்ந்து  சென்றன. ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சுங்குவார்சத்திரம் வரை சுமார் 10 கிலோமீட்டர் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

பின்னர், இந்திரா காந்தி சிலையை அகற்ற காங்கிரஸ் கட்சியினர் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT