கனமழை காரணமாக இரண்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை 
தமிழ்நாடு

கனமழை காரணமாக மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் கனமழை காரணமாக விருதுநகர், தூத்துக்குடி, தேனி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் தேனியில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

அதுபோல, கனமழை பெய்துவருவதால்  தேனி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் முரளீதரன்.

தேனி, அல்லிநகரம், பொம்மைகவுண்டன்பட்டி, ரத்தினம் நகர், பழனிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்

விஜய் வருகை 2026 தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும்: பிரேமலதா விஜயகாந்த்

வார பலன்கள் - ரிஷபம்

அர்ஜுன் தாஸின் புதிய பட ரிலீஸ் தேதி!

SCROLL FOR NEXT