தமிழ்நாடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 2022-23 ஆம் கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு வருகிற செப்டம்பர் 22 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்தது. 

http://tnhealth.tn.gov.inhttp://tnmedicalselection.org என்ற இணையதளங்களில் வருகிற அக்டோபர் 3 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருந்தது. 

அதன்படி, மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் முடிவடையவிருந்த நிலையில், வருகிற அக்டோபர் 6 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிப்பு செய்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பம் முடிவடைந்த பின்னர் மருத்துவக் கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT