நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா. 
தமிழ்நாடு

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா!

ரூ. 3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அடிக்கல் நாட்டினார்.

DIN


நீடாமங்கலம்: ரூ. 3 கோடியே 95 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அடிக்கல் நாட்டினார்.

இதற்கான நிகழ்ச்சி ஒன்றியக்குழுத்  தலைவர் சோம. செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் புதன்கிழமை  நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் கோ.பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைத்தலைவர் ரா.ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா  அடிக்கல் நாட்டினார்.

விழாவில் மாவட்ட ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் டி.எஸ்.டி.முத்துவேல், மாவட்ட வளர்ச்சி குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் நா.கவியரசு, கே.வி.கே.ஆனந்த், வை.மாயவநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்  ராணி சுந்தர், சங்கீதா செல்வேந்திரன்,  கலைவாணி மோகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அதிமுக ஆதி.ஜனகர், இந்திய கம்யூனிஸ்டு க.பாரதிமோகன்,த.மா.க.  மேனகா கார்த்திகேயன், திமுக நடனசிகாணி உள்ளிட்ட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒன்றிய ஆணையர் ரா.சுப்பிரமணியன்  வரவேற்றார். நிறைவில் வட்டார வளர்ச்சி அலுவலர்  அன்பழகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

வன்னியா் இடஒதுக்கீடு கோரி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி

அணுஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT