கோப்புப்படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பரங்கிமலை துணை ஆணையராக இருந்த பிரதீப் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மண்டல ஐ.ஜி. தேன்மொழி, சிபிசிஐடியின் சிறப்பு விசாரணைக்குழு ஐ.ஜி.யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் தேன்மொழி சிறப்பு விசாரணைக்குழு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆயுதப்படை ஐ.ஜி.யாக இருந்த கண்ணன், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தாமஸ் மவுண்ட் துனை ஆணையராக தீபக் சிவஜும்,  சென்னை போக்குவரத்து இணை ஆணையராக சமய சிங் மீனாவும் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ரூ. 2 லட்சம்! பழைய ரூ. 2,000 தாள்கள்!

தீபாவளியையொட்டி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை!

இந்தியா - பாக். உறவை இணைப்போம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்!

டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மார்க்ரம்!

கரூர் கூட்ட நெரிசல் பலி!: CBI விசாரணைக்கு உத்தரவு | செய்திகள்: சில வரிகளில் | 13.10.25

SCROLL FOR NEXT