தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு!

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்துள்ளது. 

காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் லேசான மழை  பெய்து வருவதால் புதன்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 16,701 கன அடியிலிருந்து வினாடிக்கு 17,778 கன அடியாக அதிகரித்து உள்ளது.

புதன்கிழமை காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  வினாடிக்கு 15,000 கன அடி வீதமும்,  கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 90 0கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.80  அடியாகவும், நீர் இருப்பு 91.56 டிஎம்சி ஆகவும் உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது.

மழையளவு: 40.20 மி.மீ பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

அடுத்த டயமண்ட் லீகில் கட்டாயம் முதலிடம்: நீரஜ் சோப்ரா உறுதி

பூண்டு விலை மீண்டும் உயா்வு கிலோ ரூ.400க்கு விற்பனை

மே 17 முதல் வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்

ஊழல்தான் அரவிந்த் கேஜரிவாலின் சித்தாந்தம்: தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா சாடல்

SCROLL FOR NEXT