பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்தொடக்க தின கொண்டாட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தொடக்க தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்ட தொடக்க தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
நீா்வளம், நீா் மேலாண்மை, அதற்கான கட்டமைப்பு உருவாக்கம் குறித்த விழிப்புணா்வை இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்ட அக்டோபா் 7-ஆம் தேதி இனி ஆண்டுதோறும் கொண்டாடப்படும்.
இந்தத் திட்டத்தை நிறைவேற்றிய முன்னாள் முதல்வா் காமராஜா் உள்ளிட்ட மூத்தோரை நினைவு கூறுவோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.