400-க்கும் கீழ் குறைந்தது கரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 400-க்கும் கீழ் குறைந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை 387 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 400-க்கும் கீழ் குறைந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை 387 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதில் அதிகபட்சமாக சென்னையில் 88 பேருக்கும், செங்கல்பட்டில் 33 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சையில் உள்ளோா் எண்ணிக்கை 4,977-ஆக உள்ளது.
வெள்ளிக்கிழமை 482 போ் கரோனாவிலிருந்து விடுபட்டுள்ளனா். இதன் மூலம் தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 35,43,194-ஆக அதிகரித்துள்ளது.