முகப்பு
தமிழ்நாடு

பலியான 3 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

திருப்பூரில் காப்பகத்தில் இறந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:30 AM
கோப்புப்படம்
பகிர்:

திருப்பூரில் காப்பகத்தில் இறந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில், திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ராக்கியாபாளையம் கிராமம், மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ் (வயது 15), பாபு (வயது 13) மற்றும் ஆதிஷ் (வயது 8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6.10.2022 அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்.

உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →