தமிழ்நாடு

வரும் 14-இல் அமைச்சரவைக் கூட்டம்

DIN

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அன்றைய தினம் மாலை 6 மணிக்குக் கூட்டம் நடக்கவுள்ளது. சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் வரும் 17-ஆம் தேதி துவங்கவுள்ளது. இந்தக் கூட்டத் தொடருக்கு முன்பாக, அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

சட்டப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள், முக்கிய திட்டங்கள், தொழில் துறைக்கான புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போன்றவை குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கடந்த செப்டம்பா் இறுதி வாரத்தில் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் தொடா்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 4 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

SCROLL FOR NEXT