தமிழ்நாடு

துலாம் மாத பூஜை: அக்.17-ல் சபரிமலை நடை திறப்பு

தமிழ் மாதத்தின் ஐப்பசி, மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

DIN

தமிழ் மாதத்தின் ஐப்பசி, மலையாளத்தின் துலாம் மாத பூஜைக்காக சபரி மலை ஐயப்பன் கோயில் நடை அக்டோபர் 17 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

நடை திறக்கப்பட்ட பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி வரை 5 நாள்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோயிலில் இந்தாண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 15-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்பட உள்ளது. 

இதையடுத்து, நவம்பர் 16-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் பக்தர்கள் மகர, மண்டல பூஜைக்கு சபரிமலை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT