முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் காலமானார்
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவை தங்கம் உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ்நாடுமுன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் காலமானார்
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவை தங்கம் உடல்நலக் குறைவால் காலமானார்.
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோவை தங்கம் உடல்நலக் குறைவால் காலமானார்.
வால்பாறை சட்டப்பேரவை தொகுதியிலிருந்து இரண்டு முறை வெற்றி பெற்று பேரவைக்கு தேர்வானவர் கோவை தங்கம்(73). இவர் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் கோவை தங்கம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை கோவையில் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க | 900 கி.மீ. நிறைவு.. மழையிலும் தொடரும் ராகுல் காந்தி நடைபயணம்
வால்பாறை சட்டப்பேரவை தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக 2001ஆம் ஆண்டு போட்டியிட்டு முதல்முறையாக வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து போட்டியிட்டு மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.
தொடர்ந்து, 2011ஆம் ஆண்டு வால்பாறை தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, காங்கிரஸிலிருந்து மீண்டும் ஜி.கே.வாசன் பிரிந்த போது, தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து துணைத் தலைவராக பதவி வகித்தார். 2021 பேரவைத் தேர்தலில், இவருக்கு போட்டியிட வாய்ப்பளிக்காததால் அதிருப்தி அடைந்த கோவை தங்கம், திமுகவில் இணைந்தார்.