FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வீட்டில் நின்ற மின்சார ஸ்கூட்டரில் தீ! எடப்பாடியில் பரபரப்பு

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குடியிருப்பு வீட்டில் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 பிப்ரவரி 2024, 4:03 pm IST
பகிர்:

சேலம்:  எடப்பாடி அருகே குடியிருப்பு வீட்டில் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குள்பட்ட அம்மன் நகரில்  வசிக்கும் வரதராஜன் என்பவர் தனது மின்சார ஸ்கூட்டரை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு அரை மணி நேரம் கழித்து வேலைக்கு செல்வதற்காக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் வீட்டிலிருந்த தண்ணீரை ஊற்றி கொழுந்துவிட்டு எரிந்த ஸ்கூட்டரை மேலும் தீ பரவாமல் தடுக்க முயற்சித்தனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து எடப்பாடி தீயணைப்புத் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தண்ணீர் பீச்சியடித்து தீயை முற்றிலும் அணைத்தனர்.

குடியிருப்பு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments