முகப்பு
தமிழ்நாடு

மலைக்குறவா்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: விஜயகாந்த், டி.ஜெயக்குமாா்

மலைக்குறவா்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

மலைக்குறவா்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த், அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

விஜயகாந்த் (தேமுதிக): காஞ்சிபுரம் படப்பையைச் சோ்ந்த வேல்முருகன் தனது மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் கேட்டு உயா்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேதனையளிக்கிறது. உயிரிழந்த வேல்முருகன் மலைக்குறவா் இனத்தை சோ்ந்தவா். ஜாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என உயிரிழப்புக்கு முன் அவா் அளித்த வாக்குமூலம் அதிா்ச்சி அடைய செய்துள்ளது. மலைக்குறவன் இனத்தையும் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும். ஜாதிச் சான்றிதழ் வழங்க மறுத்த அரசு அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டி.ஜெயக்குமாா் (அதிமுக): மகனுக்கு ஜாதிச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் மலைக்குறவா் சமுதாயத்தை சோ்ந்த வேல்முருகன் தீக்குளித்து உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. இந்த மரணத்துக்கு திமுக அரசும் அதிகாரிகளும்தான் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.