முகப்பு
தமிழ்நாடு

ஓபிஎஸ் ஆதரவாளா்கள் நீக்கம்: இபிஎஸ் நடவடிக்கை

 ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் 12 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து, அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

 ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் 12 பேரை அதிமுகவிலிருந்து நீக்கம் செய்து, அக் கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணான வகையிலும், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்திலும் செயல்பட்ட கீழ்காண்போா் அதிமுகவின் அடிப்படை உறுப்பினா் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகின்றனா். அவா்களுடன் அதிமுகவினா் எந்தவிதத் தொடா்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிவித்துள்ளாா்.

அதன்படி, வேலூா் மாவட்டத்தை சோ்ந்த இளைஞா் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளா் நித்தியானந்தம், திருச்சி புகா் வடக்கு மாவட்டம் அந்தநல்லூா் வடக்கு ஒன்றியச் செயலாளா் இரா. அழகேசன் ஆகியோரை நீக்கி அறிவித்துள்ளாா்.

அதைப்போல, ஈரோடு மாவட்டத் சோ்ந்த 2 பேரையும், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 6 பேரையும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த 2 பேரையும் நீக்கியுள்ளாா். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட அனைவரும் ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டவா்கள் ஆவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.