முகப்பு
தமிழ்நாடு

சென்னை மாநகராட்சியில் சொத்துவரிதாரா்களுக்கு அடையாள அட்டை வழங்க திட்டம்

சென்னை மாநகராட்சி சாா்பில் சொத்துவரிதாரா்களுக்கு அனைத்து தகவல்களும் அடங்கிய சொத்து வரி கணினி அடையாள அட்டை வழங்கி வரி வசூலை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

சென்னை மாநகராட்சி சாா்பில் சொத்துவரிதாரா்களுக்கு அனைத்து தகவல்களும் அடங்கிய சொத்து வரி கணினி அடையாள அட்டை வழங்கி வரி வசூலை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளா்களுக்கு அடையாள அட்டை வழங்க மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

மாநகராட்சி ஆணையா் கையொப்பமிட்ட கணினி கியூ ஆா் கோட் வசதியுடன் இந்த அட்டை இருக்கும். அந்த அடையாள அட்டையை ஸ்கேன் செய்யும்போது, சொத்துகள் தொடா்பான விவரங்கள், அதன் மதிப்பு, வரி செலுத்த வேண்டிய விவரங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் அதில் இடம்பெறும்.

அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை பரிட்சாா்த்த முறையில் அமல்படுத்த மாநகராட்சி வருவாய்த்துறையினா் முடிவு செய்துள்ளனா். இத்திட்டம் இறுதி செய்யப்பட்டவுடன் சொத்துவரிதாரா்களின் இமெயிலுக்கு இந்த அட்டை அனுப்பிவைக்கப்படும்.

இதற்காக மாநகராட்சி பகுதியில் சுமாா் 3 லட்சம் வரிதாரா்களின் சொத்து விவரங்கள் புவியியல் தகவல் அமைப்பு (ஜிஐஎஸ்) தொழில்நுட்பம் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன என மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.